!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 11 ஏப்ரல், 2016

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு;–

அரியலூர் மாவட்டம்
*ஜெயங்கொண்டத்தில் முந்திரி ஆராய்ச்சி பண்ணை.
செந்துறையில் முந்திரி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை.
ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய நிலக்கரி சுரங்க திட்டத்தை செயல்படுத்த முயற்சி.
அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம்.
அரியலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
ஆண்டிமடம் தனி வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்படும்.
நதியனூர் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
அரியலூர் மாவட்டத்திற்கு அரசு மகளிர் கல்லூரி, அரசு மாணவர் விடுதி.
அரியலூர் மாவட்டத்தில் ஆணை வாரி நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
பொன்னேரி பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
செந்துறை – கோட்டைக்காடு சாலையில் உள்ள வெள்ளாற்றில் மேம்பாலம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்– திருச்சி நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் ஒரு உயர்மட்ட மேம்பாலம்.
பெரம்பலூரில் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம்.
பெரம்பலூர் நகருக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் மீண்டும் செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
லெப்பைக்குடிகாடு மற்றும் பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
குன்னம் மருத்துவக்கல்லூரி பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
பூலாம்பாடி பேரூராட்சியில் கலிங்க ஓடை நீர்த்தேக்க திட்டம் நிறைவேற்றப்படும்.
மலையாளப்பட்டி சின்ன முட்டு நீர்த்தேக்க அணை திட்டம் நிறைவேற்றப்படும்.
நெய்வேலி நிலக்கரி திட்டத்திற்கு மாற்று நிலமாக வழங்கப்பட்ட புதுக்கரைப்பேட்டை, விஜயமாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை.
பெரம்பலூர்– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப்பகுதியில் அவசர விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை தொகுதியில் குண்டாறு, வெள்ளாறு இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
காவிரி உபரி நீரை புதுக்கோட்டையில் ஓடும் அக்கினி ஆற்றில் விடுவதன் மூலம் பாசன வசதி அதிகரிக்கப்படும்.
புதுக்கோட்டையில் காய்கறிகள், பழங்கள் சேமித்து வைக்க குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு.
அறந்தாங்கியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
புதுக்கோட்டை நகரின் புறவழிச்சாலை அருகே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.
அறந்தாங்கி நகரில் புதிய பஸ் நிலையம்.
காவிரி, கொள்ளிடம் உபரி நீர் மாயனூர்– மருங்காபுரி– மறவாமதுரை– கவிநாடு கண்மாய்க்கு கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொன்னமராவதி மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
விராலிமலை ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
ஆலங்குடியில் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டைப்பட்டினத்தில் கடல் உணவு பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படும்.
வல்லத்திராக்கோட்டை பழப்பண்ணை மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரூர் மாவட்டம்
கரூரில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்.
வேலாயுதம்பாளையத்தில் வெற்றிலையை சேமித்து வைக்க குளிர்பதன கிடக்கு, விற்பனை மண்டி.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட சாய மற்றும் சலவை பட்டறைகளுக்கு உடனடியாக அனுமதி.
கரூரில் புதிய பஸ் நிலையம்.
கரூரில் பழங்கள், காய்கறிகள் சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு.
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை.
மயிலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
கடவூரில் மகளிர் போலீஸ் நிலையம், பஞ்சப்பட்டியில் போலீஸ் நிலையம்.
காவிரியில் குளித்தலை அருகே தடுப்பணை கட்டி, மணல் மற்றும் நீர் எடுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
அமராவதி பாசன திட்டம் நிறைவேற்றப்படும்.
பஞ்சப்பட்டி, தாதம்பாளையம் ஏரிகளை தூர்வாரி, பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்தும், தாதம்பாளையம் ஏரிக்கு அமராவதியில் இருந்தும் உபரி நீர் கொண்டு செல்ல கால்வாய்கள்.
உப்பிடமங்கலம், வீராக்கியம் ஏரிகள் தூர்வாரப்படும்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூரில் வாழை பதப்படுத்தும் கிடங்கு. திருச்சி நவல்பட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை செயல்படுத்த நடவடிக்கை. திருச்சி காந்தி சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை. திருச்சி பால் பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை. திருச்சியில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு, பாய்லர் ஆலை நிறுவனம், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு நிலைக்குழு அமைக்கப்படும். மணப்பாறையில் பாதாள சாக்கடை திட்டம். மண்ணச்சநல்லூரில் தீயணைப்பு நிலையம், நவீன வசதிகளுக்கு பஸ் நிலையம். துறையூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும். உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பஸ் நிலையம், நெல்நேரடி கொள்முதல் நிலையம். துறையூர் அரசு பொது மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள். திருச்சி –தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடி சுங்கவரி சாலையில் இருந்து வாழவந்தான்கோட்டை– சர்க்கார்பாளையம் வழியாக திருச்சி– சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சுற்று சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொட்டியத்தில் வாழை வணிக வளாகம். மண்ணச்சநல்லூருக்கு புறவழிச்சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருச்சி நகரில் மலர் சந்தை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png