!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் அதிகரிக்கும்'
புதுடில்லி,: 'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது; அடுத்த, 35 ஆண்டுகளில், இது மேலும் குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:* கடந்த, 1991 முதல், 
2013ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் வேலை பார்க்கும் வயதை எட்டிய, 30 கோடி பேரில், 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைகிடைத்துள்ளது
* தற்போது சராசரியாக, ஒரு மாதத்துக்கு, 10 லட்சம் பேர் வேலையில் சேருகின்றனர்
* வேலை பார்க்கக் கூடிய வயது பிரிவில் உள்ளவர்களில், மூன்று கோடி பேர், மேல்படிப்பு படிக்கின்றனர்
* வரும், 2050ல், மேலும், 28 கோடி பேர், வேலை பார்க்கும் வயது பிரிவை எட்டுவர்
* மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், அதிக அளவு மக்கள் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
* சீனாவில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அங்கு, ஏழ்மை குறைந்துள்ளது* இந்தியாவில், உற்பத்தி துறையின் பங்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில், 11 சதவீதமாக மட்டுமே உள்ளது
* உற்பத்தி துறையில் அதிக வளர்ச்சியை அடைந்தால் தான், எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png