!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

100 வயதை கடந்த வாக்காளர் தமிழகத்தில் 7,627 பேர்
தமிழகத்தில், 100 வயதில் இருந்து, 130 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள், 7,627 பேர் உள்ளனர். இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 100 வயதில் இருந்து, 130 வயதிற்குட்பட்டவர்கள், 7,627 பேர். இவர்களில், 28 பேர், 130 வயதை நெருங்கியவர்கள் என கூறப்படுகிறது. அவர்களின் வயது சரியா என விசாரிக்கப்படுகிறது. 100 வயதை கடந்த வாக்காளர்களில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 597 பேர் உள்ளனர்.ஓட்டுச்சாவடிகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், வரிசையில் நிற்காமல், நேரடியாக சென்று ஓட்டுப் போடலாம். ஓட்டுப்போட வரும் முதியோரை, அவர்களின் உறவினர்கள், ஓட்டுச்சாவடி வரை அழைத்து வரலாம். ஓட்டுச்சாவடி உள்ளே, அவர்களே சென்று ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png