!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

மாணவர்களிடையே திருக்குறளைப் போதிக்கத் திட்டம்

பெங்களூரில் மாணவர்களிடையே திருக்குறளை போதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர்சி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 2016-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிரியாவிடை மற்றும் திருவள்ளுவர் தினவிழா பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தில் உள்ள டீவ் டிராப்ஸ் ஹோட்டலில் மே 1-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடக்கவிருக்கிறது.
திருக்குறளின் போதனைகளை இந்தியா மட்டுமன்றி உலக அஅளவில் கொண்டு செல்லும் நற்செயலை செய்துவரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் விழாவில் கெளரவிக்கப்படவிருக்கிறார்.
வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்தி மொழியில் திருக்குறளை பரப்பிவருவதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் நாளை கொண்டாட மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தவர் தருண்விஜய்.
மேலும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திருக்குறளை கட்டாயமாகப் போதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். வட இந்தியாவில் கங்கை திக்கரையில் திருவள்ளுவரின் சிலையை அமைக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்.
திருக்குறளை கற்றுத் தேர்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தில் விழா நடத்தி கெளரவித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளின் போதனைகளை பரப்பி வருகிறார்.
தருண்விஜயை பாராட்டுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கடலாக விளங்கும் திருக்குறளை பரப்ப மேலும் ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல, பெங்களூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் போதனைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரு தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சங்கத்தின் உதவியை நாடுவோம். திருவள்ளுவர் தின விழாவில் தமிழன்பர்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
பேட்டியின் போது சிறகுகள் அமைப்பு நிர்வாகி தாஸ், பெங்களூரு தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் சுந்தர்வேலு உடனிருந்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png