!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

7 கல்லூரிகளுக்கு 'சீர்மிகு அந்தஸ்து'
தமிழகத்தில், ஏழு கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 124 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின், 'சீர்மிகு கல்லுாரி அந்தஸ்து' வழங்கப்பட்டு உள்ளது.

நாட்டிலுள்ள முக்கிய பல்கலைகள், கல்லுாரிகளின் செயல்திறன் அடிப்படையில், அவற்றுக்கு பல முக்கிய அங்கீகாரங்கள், மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. 'நாக்' எனப்படும், தேசிய தர அங்கீகார கமிட்டியின் தர வரிசை, பல்கலை மானியக் ழுவான, யு.ஜி.சி.,யின் சீர்மிகு கல்லுாரி அந்தஸ்து ஆகியவை வழங்கப்படுகின்றன.


இந்த ஆண்டு சீர்மிகு கல்லுாரிகள் அந்தஸ்துக்கு, 124 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், ஏழு கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.

சென்னை தாம்பரம் எம்.சி.சி., கல்லுாரி, தேனாம்பேட்டை ஜஸ்டிஸ் பஷீர் அகமத் சையத் மகளிர் கல்லுாரி, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லுாரி, நுங்கம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரி, கதீட்ரல் சாலை ஸ்டெல்லா மேரி கல்லுாரி, மதுரை விவேகானந்தா கல்லுாரி மற்றும் கோவை, சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி ஆகியவை, சீர்மிகு கல்லுாரி அந்தஸ்துக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png