!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 28 ஏப்ரல், 2016

கல்லூரி பணி நியமனத்துக்கு லஞ்சம் வேலூர் சி.எஸ்.ஐ., பிஷப் மீது வழக்கு

ஊரிசு கல்லுாரியில், பணி நியமனத்துக்கு, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் படி, வேலுார், சி.எஸ்.ஐ., பிஷப் மற்றும் காசாளர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.வேலுார், அண்ணா சாலையில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஊரிசு கல்லுாரி அமைந்துள்ளது. அரசு நிதியுதவி பெற்று செயல்படும் இந்த கல்லுாரி, வேலுார், சி.எஸ்.ஐ., பிஷப் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

இந்த கல்லுாரியில், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணி நியமனத்துக்காக, பணம் பெற்று மோசடி நடந்திருக்கிறது என, வேலுார் முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுரேந்தர்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இந்த புகார் மீது, வேலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, பணி நியமனத்துக்காக, 21 பேரிடம், 10 லட்சம் முதல், 15 லட்ச ரூபாய் வரை, பணம் பெற்று, மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து, வேலுார், சி.எஸ்.ஐ., பிஷப் ராஜவேலு, கல்லுாரி காசாளர் எழில் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கல்லுாரி காசாளர் எழில் கிறிஸ்துதாஸ் மற்றும் நான்கு சாட்சிகளிடம், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து, விரைவில், பிஷப் ராஜவேலுவை விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png