!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 28 ஏப்ரல், 2016

விடுப்பு அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்


 தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, வேலை அளிப்போர் அமைப்புகளுடன், தொழிலாளர் கமிஷனர் அமுதா, நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, மே 16ம் தேதி தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தேர்தல் நாளன்று, சம்பளத்துடன் கூடிய, விடுப்பு குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக, தொழிலாளர் துறையால், முதன் முறையாக மாநில மற்றும் மாவட்ட அளவிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அளவில், சென்னையில் தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், துணை கமிஷனர் லட்சுமிகாந்தன் தலைமையிலும், மாவட்ட அளவில், தொழிலாளர் ஆய்வாளர்கள் தலைமையிலும், கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்கள், www.labour.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாநில கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்ய, 044 - 24335107, 94435 98801, 94453 98695, 94453 98694, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவிலும், புகார் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png