!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தரப் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட, 12 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஊட்டச்சத்து திட்டமாக இது உள்ளது.450 கலோரி சக்திஉணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 450 கலோரி சக்தி, 12 கிராம் புரோட்டின் கிடைக்கும் வகையில் உணவு அளிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 700 கலோரி சக்தியும், 20 கிராம் புரோட்டினும் அடங்கிய உணவு அளிக்கப்பட வேண்டும்.


இதை உறுதி செய்யும் வகையிலும், தரமாகவும் உணவு தயாரிக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.இருப்பினும், பல்வேறு இடங்களில், உணவு தரம் குறைந்து இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உணவின் தரத்தை பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு:இது குறித்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.மாநிலங்களின் உதவியுடனும்,
பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன், இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு தரமான மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png