!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை மீட்டு, கல்வி கற்கச் செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, தூத் துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர் கோவில், வேலூர், திருவண்ணா மலை, திருச்சி, ஈரோடு, காஞ்சி புரம் ஆகிய 15 மாவட்டங் களில் இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது.


தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள், செங்கல் சூளைகள், கடைகள், ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் 9 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சிறப்புப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு, பின்னர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வரும் 15 மாவட்டங்களிலும் பள்ளி செல் லாக் குழந்தைகள், மாற்றுத் திற னாளிகள், குழந்தைத் தொழிலாளர் களைக் கண்டறிய கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய அரசு மூலம் சுமார் ரூ.15 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் என சுமார் 400 பேர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png