!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 6 மே, 2016

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது மாணவர்கள், பெற்றோர் குழப்பம்
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்து, ஒரு மாதம் கடந்த நிலையில், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கடும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4 முதல், ஏப்., 1 வரை நடந்தது. இதில், 8.5 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் பங்கேற்றனர். ஏப்., 20ல், விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, அதன் விபரங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் இருந்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டன. பின், அவை தனியார் மென்பொருள் நிறுவன தொழில் நுட்பத்துடன், சரி பார்க்கப்பட்டு மதிப்பெண் பட்டியலும் தயாரிக்கப்பட்டது.

ஏப்., 29 அல்லது மே, 2ல், தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்வுத் துறை இயக்குனரகம் முடிவு செய்திருந்தது. ஆனால், இதுவரை தமிழக அரசிடம் இருந்து எந்த உத்தரவும், தேர்வுத் துறை இயக்குனரகத்துக்கு கிடைக்கவில்லை. அதனால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் நிறுத்தி வைத்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கடந்த, ஐந்து ஆண்டுகளாக, பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பள்ளி கல்வித்துறை செயலகம் மூலம், முதல்வர் அலுவலகத்தில் இருந்து, ஒப்புதல் பெறப்பட்டு அமலுக்கு வந்தது

* இந்த முறை, தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், யாரிடம் இருந்து உத்தரவு பெறுவது என, பள்ளி கல்வித் துறையும், தலைமைச் செயலகமும் குழப்பத்தில் உள்ளன

* முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில், 'பிசி' ஆக உள்ளதால், அவரை தொடர்பு கொண்டு எப்படி ஒப்புதல் பெறுவது என, கல்வித் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்

* முதல்வரிடம் ஒப்புதல் பெறாமல், தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறது. இது போன்ற குழப்பங்களால், பிளஸ் 2 தேர்வு முடிவை அறிவிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அரசிடம் இருந்து உத்தரவு வந்தால், உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியாகும்' என்றனர்.
எதிர்பார்ப்பது யார்?

* மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு அவசியம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வரும் என, மாணவர், பெற்றோர் பரிதவிப்பில் உள்ளனர்

* இன்ஜி., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும், அண்ணா பல்கலை கால அவகாசம் நிர்ணயிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது
* மேலும், தேர்தல் பணிகளுக்கும், தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டி உள்ளதால், ஆசிரியர்களும், 'பிளஸ் 2 முடிவு எப்போது வரும்' என, எதிர்பார்த்து உள்ளனர்.


9ம் தேதி ரிலீசாகுமா

'தமிழகம் முழுவதும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், மே, 9ம் தேதி கண்டிப்பாக, பள்ளிகளில் பணியில் இருக்க வேண்டும்' என, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதனால், அன்றைய தினம், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போதும் வெளி வராவிட்டால், தேர்தலுக்கு பின் அறிவிக்க வாய்ப்புள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png