!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 20 மே, 2016

'நோட்டா'வுக்கு 5.58 லட்சம் ஓட்டுகள்

'எவருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' என்ற, 'நோட்டா'வுக்கு, 5.58 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

தேர்தலின் போது யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர்களுக்கு, யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என பதிவு செய்யும் வாய்ப்பை வழங்க இருக்கிறோம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

மேலும், 'நோட்டா'வில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணப்பட்டு, செல்லாத ஓட்டுகளாக கருதப்படும் எனவும் கூறியிருந்தது.இந்த வழக்கில், 2013 செப்., 27ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'தேர்தலின் போது, யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்ற உரிமையை, வாக்காளர் களுக்கு வழங்க வேண்டும்; அதற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பொத்தான் வழங்க வேண்டும். அப்போதுதான், தேர்தல் நடவடிக்கைகளில் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்' என, தீர்ப்பளித்தது.

* தனி சின்னம்இந்த தீர்ப்பை தொடர்ந்து, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 'நோட்டா' அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, நாடு முழுவதும், 60 லட்சம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டளித்தனர். மொத்தம் பதிவான ஓட்டுகளில், 'நோட்டா', 1.1 சதவீதத்தைப் பெற்றது. 2015 செப்., 18ல் இருந்து, 'நோட்டா'வுக்கு, தனி சின்னம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 5.68 லட்சம் ஓட்டுகள், நோட்டாவுக்கு பதிவாகின. இது, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 1.4 சதவீதமாகும்.
* அதிகபட்சம்; குறைந்தபட்சம்தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், 'நோட்டா'வுக்கு, 5.58 லட்சம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது, பதிவான மொத்த ஓட்டுகளில், 1.3 சதவீதம்.

சென்னை, அண்ணாநகர் தொகுதி உட்பட, 13க்கும் மேற்பட்ட தொகுதிகளில், 'நோட்டா'வுக்கு ஆதரவாக, 4,000 ஓட்டுகளுக்கு மேல் பதிவாகியுள்ளன. மிக அதிகபட்சமாக, சோழிங்கநல்லுார் தொகுதியில், 7,183 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மிகக் குறைவாக, மதுரை மாவட்டம் மேலுார் தொகுதியில், 757 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png