!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 11 மே, 2016

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்த வாய்ப்பு மத்திய அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்தும் வாய்ப்பு குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

நுழைவுத் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மாதம் 11–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் அனில் ஆர்.கே. தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு அவற்றை தள்ளுபடி செய்து இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது.
அந்த உத்தரவில், ‘மே 1–ந் தேதி நடத்தப்பட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், விரும்பினால் 2–ம் கட்டமாக ஜூலை 24–ந் தேதி நடத்தப்படும் தேர்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் முதலில் எழுதிய தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது. மே 1–ந் தேதி நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்காதவர்கள் 2–ம் கட்ட நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் 2–ம் கட்ட நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.
6 பிராந்திய மொழிகள்
சி.பி.எஸ்.இ. நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வு ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே இருக்கும் என்பதால் மாநில மொழிகளில் எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மராத்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ‘‘2–ம் கட்ட நுழைவுத்தேர்வு ஆங்கிலம், இந்தி தவிர்த்த 6 பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து கோர்ட்டு தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
வாய்ப்பு
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக நேற்று நடந்தது.
அப்போது நீதிபதிகள் இருவரும் கூறும்போது, ‘‘இதுபற்றி இன்னொரு நீதிபதி சிவகீர்த்தி சிங்கிடம்(நுழைவுத் தேர்வு விசாரணை அமர்வில் இடம்பெற்ற இன்னொருவர்) கலந்து ஆலோசித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறோம்’’ என்றனர்.
இதனால் பொது நுழைவுத்தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.



Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png