!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 11 மே, 2016

ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழக மாணவி சரண்யா 7வது இடம்
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு குடிமைப் பணிகளுக்காக நடந்த தேர்வில், டில்லி மாணவி டினா தாபி, தேசிய அளவில், முதல் இடத்தை பிடித்தார். சென்னையைச் சேர்ந்த மாணவி, சரண்யா, ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.


முதல் கட்டத் தேர்வு, 'மெயின்' தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களை உடையது, இந்தத் தேர்வு. 2015ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.அதன்படி, மொத்தம், 1,078 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 499 பேர், பொதுப் பிரிவிலும், 314 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், 176 பேர், தாழ்த்தப்பட்டோர் பிரிவிலும், 89 பேர், பழங்குடியினர் பிரிவிலும் தேர்ச்சி பெற்றனர்.

172 பேர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கடந்த டிசம்பரில் நடந்த, 'மெயின்' தேர்வு மற்றும் இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில், தேர்வு பெற்றோரின் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.இதில் டில்லியைச் சேர்ந்த டினா தாபி, 22, முதலிடத்தைப் பிடித்துள்ளார். டில்லி லேடி ஸ்ரீராம் கல்லுாரியில் அரசியல் அறிவியல் படித்துள்ள இவர், தன் முதல் முயற்சியிலேயே, இந்தத் தேர்வில், நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இரண்டாம் இடத்தை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷாபி கானும், 23, மூன்றாம் இடத்தை டில்லியைச் சேர்ந்த, ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜஸ்மித் சிங் சாந்துவும் பிடித்துள்ளனர். தன், இரண்டாவது முயற்சியில், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள ஷாபி கான், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர்.

கடந்த, 2014 தேர்வில், ஐ.ஆர்.எஸ்., ஆக தேர்வான ஜஸ்மித் சிங் சாந்து, பரிதாபாத்தில் உள்ள தேசிய சுங்கம், கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்பு மையத்தில் பயிற்சியில் உள்ளார்.

சென்னையில் பயிற்சிபெற்ற சரண்யா
''எங்கள் மையத்தில் நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி பெற்ற சென்னை மாணவி சரண்யா அரி, தேசிய அளவில், ஏழாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்,'' என, சென்னையில் உள்ள கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்தியஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.

இந்த மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய, 55 பேரில், 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி அதிகாரியின் மகள், வந்தனா ராஜி, தேசிய அளவில், 295வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யாவின் பேட்டி:கடந்த, 2011ல், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், ஐ.டி., - பி.டெக்., படித்தேன். பின், ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு தேர்வானேன். என் தந்தை அறிவழகன், விமானப்படையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அதனால், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எனது, வெளிநாட்டு பயணத்தை தடுத்தார். பின், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானேன். இது, எனது ஆறாவது முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய அளவில், 37வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள டாக்டர் வைத்தியநாதன் கூறியதாவது:
புதுச்சேரி வினாயகா மிஷன் மருத்துவக் கல்லுாரியில், 2009ல் எம்.பி.பி.எஸ்., முடித்தேன். நோயற்ற சமூகத்தை உருவாக்க, ஐ.ஏ.எஸ்., தான் சரியான தேர்வு எனவும் உணர்ந்தேன். வீட்டில், என் அக்கா பொன்னி, ஏற்கனவே, ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, திருவண்ணாமலையில் பணியாற்றுகிறார். அவர் தான், அப்பா அம்மாவிடம் பேசி, என் விருப்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய அளவில், 37வது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ள, சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:கடந்த 2014ல், கிண்டி, 'காலேஜ் ஆப் இன்ஜினியரிங்'கில், பி.இ., முடித்தேன். எனக்கு, சிறுவயதிலேயே சமூக பணியில் விருப்பம் இருந்தும், பெற்றோர் விருப்பத்திற்காக இன்ஜினியரிங் படித்தேன். பின், என் விருப்பத்திற்காக ஐ.ஏ.எஸ்., படித்தேன். முதல் முயற்சியிலேயே தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png