!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 11 மே, 2016

தேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு
அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால், தமிழ் வழி கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; எனவே, அதை அனுமதிக்க கூடாது' என, பள்ளி கல்வி துறை செயலர் சபீதாவிடம், தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.


இதுகுறித்து, கூட்டமைப்பின் மாநில செயலர் இளங்கோவன் அளித்த மனு:

அரசு மருத்துவ கல்லுாரியிலும், அரசு இட ஒதுக்கீடு உள்ள தனியார் கல்லுாரிகளிலும் இடம் பெற, நாடு முழுவதும், 90 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில், அவ்வகை தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால், அகில இந்திய நுழைவு தேர்வு ஏற்புடையதல்ல
அகில இந்திய நுழைவு தேர்வு, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இருப்பதால், தமிழ் வழி மாணவர்கள், அந்த தேர்வை எழுதுவது கடினமாக இருக்கும்
சிறந்த மருத்துவ கல்லுாரிகளான, 'எய்ம்ஸ், ஜிப்மர்' போன்றவற்றுக்கு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்போது, அதே விலக்கு, ஏன் தமிழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு வழங்க கூடாது?
மருத்துவ நுழைவு தேர்வு, தேசிய பாட திட்டத்தை சார்ந்து உள்ளதால், மாநில அரசு பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, அந்த தேர்வு மிகவும் கடினமாக இருக்கும்
2012ல், மருத்துவ நுழைவு தேர்வு அறிவித்தபோது, ஆந்திர மாநிலம், தம் மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தது. இதேபோல், தமிழகத்திற்கும், கால அவகாசம் அளிக்க வேண்டும்
மாநில அரசு, தேசிய அறிவியல் பாட திட்டத்தை உடனடியாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்களில் அறிமுகம் செய்ய வேண்டும். பாட புத்தகங்களும் அதை சார்ந்தே இருக்க வேண்டும். அறிவியல் பாட புத்தகங்கள், தமிழ் வழி மாணவர்களுக்காக, தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்
தேசிய கல்வி திட்டத்திற்கு இணையான வகுப்புகள், 6ம் வகுப்பில் இருந்தே செயல்படுத்த வேண்டும்
மாநில அரசு, பாட திட்டத்தில் மாணவர்களுக்கு விருப்பத்தை உண்டாக்க, குஜராத் மாநிலம் ஏற்படுத்திய முறையை, தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png