!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 27 மே, 2016

கல்வி மாவட்ட அளவில் லால்குடி தேர்ச்சி அதிகம்

 சதவீத அடிப்படையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் லால்குடி மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், அதிகளவு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் திருச்சி கல்வி மாவட்டம் முன்னணியில் உள்ளது.

திருச்சி கல்வி மாவட்ட அளவில் 12,144 மாணவர், 12,041 மாணவியர் என 24,165 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,333 மாணவர் (93.32 சதவீதம்), 11,749 மாணவியர் (97.74) என 23,082 (95.52) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். லால்குடி கல்வி மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 3,482 மாணவர், 3,266 மாணவியர் என 6,748 பேரில், 3,319 மாணவர் (95.32), 3,197 (97.59) என 6,516 (96.56) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முசிறி கல்வி மாவட்டத்தில் 4,336 மாணவர், 4,400 மாணவியர் என 8,736 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,141 (95.50) மாணவர், 4,294 (97.59) மாணவியர் என 8,435 பேர் (96.55 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 3 கல்வி மாவட்டத்தையும் சேர்த்து தேர்வு எழுதிய 39,649 மாணவ, மாணவியரில் 38,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்வி மாவட்ட அளவில் சதவீத அடிப்படையில் லால்குடி கல்வி மாவட்டம் தான் 96.56 சதவீதம் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. 

ஆனால் திருச்சி கல்வி மாவட்டத்தில் மட்டும் தான் 24,165 பேர் தே்ரவு எழுதி, 23,082 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png