!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 27 மே, 2016

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பணம் இல்லை:அரசு ஊழியர்கள் தவிப்பு
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கு பணம் தர மறுப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அவர்களிடம் மாதம் ரூ.150 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. புற்றுநோய், இருதய நோய் உட்பட 59 வகையான நோய்களுக்கு 300 க்கும் மேற்பட்ட தனியார்,அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.இந்த திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.
இழப்பீடு கணக்கிட்டு வழங்கும் பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. சமீபகாலமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நத்தத்தைச் சேர்ந்த ஆசிரியர் அருண்மாணிக்கம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பல முறை போராடி, 4 தவணைகளில் பணத்தை பெற்றோம். இதேபோல் மாநிலம் முழுவதும் இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படுவதில்லை. பிரச்னை செய்வோருக்கு 
மட்டுமே பணம் வழங்குகின்றனர்.டாக்டர் ஆலோசனை கட்டணம், அறுவை சிகிச்சைக்கான தொகை, அறை வாடகை, உணவு உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் தர வேண்டுமென, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்த மறுக்கிறது, என்றனர்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “ அரசு விதிமுறைப்படி இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறோம்,” என்றார்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png