!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 6 மே, 2016

பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு குறித்த அறிவிக்கை தமிழக அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு குறித்த அறிவிக்கை தமிழக அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த பொதுத்தேர்வால் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவர் என்பதால் இதற்கு பதிலாக மாநிலங்களே சொந்தமாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பொதுநுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பிலும், சில தனியார் மருத்துவ கல்லூரி அமைப்புகள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நடைபெற்றது.
தமிழக அரசு மற்றும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிரி தனது வாதத்தில் கூறியதாவது:-
கடந்த 2007-ம் ஆண்டிலேயே தமிழக அரசு தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை குறித்த சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 2009-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த அறிவிக்கையை வெளியிட்டது.
இது மருத்துவ கவுன்சிலின் சட்டத்துக்கு உட்பட்டது. இந்த அறிவிக்கை தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அப்படி தமிழக அரசின் சட்டத்தை மீறி மருத்துவ கவுன்சில் சட்டத்தின் அடிப்படையில் வெளியிட்ட அறிவிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் தமிழக அரசின் சட்டத்தை மீறி செயல்படும் வகையில் அமைய முடியும்.
மருத்துவ கவுன்சில் அறிவிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த அறிவிக்கை மீது தடையும் பெற்றுள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கையின்படி நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதனை தொடர்ந்து குஜராத், மராட்டியம், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துபூர்வமான வாதத்தை ஒரு பக்க அளவில் அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். வழக்கின் மீதான விசாரணை இன்றும் தொடரும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png