!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 7 ஜூன், 2016

அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை பாதியில் வெளியேற்றுவதா:உயர்நீதிமன்றம் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களை கட்டாயப்படுத்தி, இடையில் வெளியேற்றக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.சிவகாசி அருகே பி.பாறைப்பட்டி பஞ்சவர்ணம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறேன். எனது கணவர் டிரைவர். எனக்கு 2 மகன்கள். மூத்த மகன் கண்ணன் அருகிலுள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். அவர் உட்பட சில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன.,20 ல் பள்ளி மாற்றுச் சான்றிதழை கொடுத்து, அனுப்பினர்.


தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, ''உங்கள் மகன் அரையாண்டுத் தேர்வில் ஆங்கிலம், கணித பாடங்களில் தோல்வியடைந்தார். இப்படிப் பட்ட மாணவர்கள் பள்ளியில் இருந்தால், 100 சதவீத தேர்ச்சி பெற இயலாது. அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளதால், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது,''என்றார். விருதுநகர் கலெக்டரிடம் புகார் செய்தோம். பின், எனது மகனை பள்ளியில் சேர்த்தனர்.

இந்நிலையில், எனது மகன் இரண்டாவது தகுதித் தேர்வை முழுவதும் எழுதாதது மற்றும் ஒரு மாதம் பள்ளிக்குச் செல்லாத காரணத்தினால், 2015--16 பொதுத் தேர்வை முழு தகுதியுடன் எழுத முடியவில்லை.மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, பள்ளியைவிட்டு நீக்கி, எனது மகனுக்கு மன ரீதியான உளைச்சல் கொடுத்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முழுமையான தகுதியுடன் எழுத முடியாததால் பள்ளி நிர்வாகம், அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லை என தவறான முடி
வெடுத்து, எனது மகனுக்கு மாற்றுச் சான்று கொடுத்தது நியாயமற்றது. இதனால், பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பஞ்சவர்ணம் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் நுாட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் கொண்ட அமர்வு:100 சதவீத தேர்ச்சிக்காக அரசுப் பள்ளிகளிலிருந்து, மாணவர்களை கட்டாயப்படுத்தி, இடையில் வெளியேற்றக்கூடாது. அரசுபள்ளிகள் துவங்கியது 100 சதவீத தேர்ச்சிக்காக அல்ல; மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவே. பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதை இழப்பீடு வழக்காக கருத முடியாது. மனுவை பைசல் செய்கிறோம் என்றனர். மனுதாரர் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png