!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 15 ஜூன், 2016

ஜூன் 20ல் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு : 17ல் தர வரிசை


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. தர வரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது. இவற்றை வெளியிட்டு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தன; 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.மாநில ஒதுக்கீட்டிற்கு, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, 2,853 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்தோருக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு, 20ம் தேதி துவங்கும்.

பலர் ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தால் தாவரவியல், விலங்கியல், வேதியியல் பாட மதிப்பெண்கள்; பின், நான்காவது விருப்ப பாட மதிப்பெண்; பிறந்த தேதி பார்க்கப்படும். அதிலும், ஒரே நிலை இருந்தால் பயன்படுத்த, சம வாய்ப்பு எண் எனப்படும், 'ரேண்டம்' எண் தரப்
படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png