!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 9 ஜூன், 2016

விருதுநகர் பள்ளிகள்: மாணவர்களே உஷார்
விருதுநகர் மாவட்டத்தில் அரசின் அங்கீகாரம் பெறாமல் 22 தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . அப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவோ, படிப்பை தொடரவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி அரசின் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், சாத்துாரில் கம்மவார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , ஸ்ரீவில்லி புத்துாரில் மிலிட்டரிமேன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, விருதுநகரில் மாரியம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வெம்பக்கோட்டையில் கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, குட்ஷெபர்டு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடாது.

இதுபோல் திருச்சுழியில் ரோஜா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பத்ரகாளியம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நரிக்குடியில் மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அருப்புக்கோட்டையில் கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஜி.கே. இன்டர் நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,காரியாபட்டியில் பொன்பழனி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,ராஜபாளையத்தில் லயன்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, விக்டரி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அல்ஹூதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நவ்ரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கிரேஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீராகவேந்திரா வித்யாமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாடார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றன.

சிவகாசியில் ஆற்றலரசு கே. ஆறுமுகசாமி நாடார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கே.வி.டி.எஸ். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வத்திராயிருப்பில் ஸ்ரீவிவேகானந்தா வித்யாமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என மாவட்டத்தில் 22 தொடக்கப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png