!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 28 ஜூன், 2016

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அமைச்சரவை நாளை முடிவு?




மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஜூன் 29}இல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிதி அமைச்சக உயரதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்து வருகிறது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஜூன் 29-ஆம் தேதி முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.23,500 ஆகவும், அதிகபட்ச ஊதியத்தை ரூ.3.25 லட்சமாகவும் செயலர்கள் குழு பரிந்துரை செய்திருக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png