!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 28 ஜூன், 2016

சோறு ஊட்டு : தலைமையாசிரியை - தண்ணீர்

எடுத்து வா : சத்துணவு ஆயா : பள்ளி 

மாணவிகளுக்கு நடக்குது கொடுமை



 மாணவிகளை தனது குழந்தைக்கு சோறு ஊட்டச் சொல்கிறார் அரசு பள்ளி தலைமையாசிரியை சாந்தி. தண்ணீர் எடுக்க கூறுகிறார் சத்துணவு ஆயா. இது குறித்து, புகார் தெரிவித்தால் அனுசரித்து போகுமாறு அதிகாரிகள் கூறுவதாக, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் எஸ்.வல்லக்குளத்தை சேர்ந்த பழனிவேல் மகள் கோகுலஸ்ரீ. ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
சத்துணவு சமையலர் லட்சுமி, கோகுலஸ்ரீ உட்பட சில மாணவிகளிடம் சமைப்பதற்கு தண்ணீர் பிடித்து வரச்சொல்கிறார். இது தொடர்பாக பள்ளியில் பழனிவேல் விளக்கம் கேட்டும் முறையான நடவடிக்கை இல்லை. இதனால் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

சமையலாளர் லட்சுமி என் மகளிடம் தினமும் சமைப்பதற்காக பெரிய குடத்தில் தண்ணீர் பிடித்து வர கூறுகிறார். வறுமை நிலையில் உள்ளவர்கள் பிள்ளைகளை படிக்க அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பினால், வேலைக்காரி போல் வேலை வாங்குகிறார்கள். பலமுறை தலைமையாசிரியையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என வந்தேன். அவரோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பாருங்கள் என கூற, அங்கு சென்றேன். அங்குள்ளவர்கள், 'பள்ளியை பகைத்து கொண்டால் பிள்ளைகள் படிக்க முடியாது. அனுசரித்து போங்கள்' என்கின்றனர். முறையான நடவடிக்கை இல்லை என்றால் என் மகளை பள்ளி அனுப்ப மாட்டேன்.

பழனிவேல், மாணவியின் தந்தை

ஆயாம்மா (சத்துணவு ஊழியர்)அடிக்கடி தண்ணீர் பிடித்து வருமாறு கூறுவார். பெரிய குடத்தை தூக்க முடியாமல் தூக்கி வருவேன். கை, கால் வலி அதிகமாக இருக்கும். படிக்க கூட முடியாது அசதியாக இருக்கும். என்னை போல் மாணவிகள் கவிதா, ஸ்ரீமதியையும் வேலை வாங்குவார். பள்ளி தலைமையாசிரியை சாந்தி, அவரது மகளுக்கு சோறு ஊட்டுமாறு கூறுவார். இப்படி எங்களை வேலை வாங்குவதால் பள்ளியில் படிக்கும் நேரம் குறைவு தான்.

கோகுலஸ்ரீ, மாணவி

சத்துணவு சமையலர் குழாயில் காலி குடத்தை வைக்க தான் கூறி உள்ளார். அதற்கு மாணவியின் தந்தை பள்ளிக்கு வந்து பிரச்னை செய்துள்ளார். அன்று நான் பள்ளியில் இல்லை. ஆசிரியை மட்டும் இருந்தார். எனக்கு என்ன பிரச்னை என்றே தெரியாது. தொடக்கப்பள்ளி அலுவலர் மாணவர்களை வேலைவாங்க கூடாது என கூறி உள்ளார். எனது குழந்தையை பள்ளி மாணவர்கள் தாங்களாகவே வந்து தூக்கி கொஞ்சுவார்கள். அதை எப்படி தடுக்க முடியும். இவ்வூரின் நிலையறிந்து, 50 மாணவர்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறேன்.

சாந்தி, தலைமையாசிரியை

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png