!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 2 ஜூன், 2016

முதல்வர் படத்திற்காக நோட்டுகள் தாமதம் மூன்று வகுப்புகளுக்கு புத்தகம் இல்லை
முதல்வர் படம் அச்சிடுவதற்காக,பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று வகுப்புகளுக்கு ஒரு தொகுதிக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.


கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும் என, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

முதல்வர் படம் அச்சிட தாமதமானதால் பள்ளிகளுக்கு நோட்டுகள் அனுப்பப்படவில்லை.

பாடப்புத்தகங்கள் மட்டும் தயாராக இருந்தன. அவற்றையும் முதல்வர் வழங்க துவங்கிய பிறகே வழங்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் காலையில் வழங்கப்படாமல், மாலை 3:30 மணிக்கு பிறகே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,சமூகஅறிவியல் ஆகிய பாடங்கள் 2 தொகுதி புத்தகங்களாக வழங்கப்பட வேண்டும். ஆனால் 3, 5 மற்றும் 6 ம் வகுப்புக்கு ஒரு தொகுதி புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் மற்ற பாடங்களை படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஓரிரு நாட்களில் விடுபட்ட மற்றொரு தொகுதி பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும்,' என்றார்.


தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும் என, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png