!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 6 ஜூன், 2016

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,

 மாணவர்களிடம் அதிக கட்டணம்

வசூலிக்கப்படுவதாக  புகார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பு வாரியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள், ரசீது தராமல் ஏமாற்றுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. 


இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் இலவச பொருட்களும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் அரசு நிதியில் தான் சம்பளம் தரப்படுகிறது.

ஆனாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைமுகமாக பலவித கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வசூலுக்கு எந்த ரசீதும் வழங்காமல் பள்ளி நிர்வாகங்கள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ள நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றுக்கு மாணவர்களை சேர்க்க, மறைமுக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இந்த பள்ளிகளுக்கு நிகராக, பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், தமிழ் வழிக்கு தலா 
250 ரூபாய்;ஆங்கில வழிக்கு 400 ரூபாய்
* ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு தமிழ் வழிக்கு 350 ரூபாய்; ஆங்கில வழிக்கு, 550 ரூபாய்
* பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தமிழ் வழிக்கு 700 ரூபாய்; ஆங்கில வழிக்கு 900 ரூபாய் என, பெரும்பாலான பள்ளிகள் வசூலிக்கின்றன; இதற்கு, எந்த விதமான ரசீதும் வழங்குவதில்லை.
* இந்த வசூலில், அரசியல் மற்றும் உள்ளூர் செல்வாக்கில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தில் நியமிக்கப்பட்ட வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
* பெற்றோர் ஆசிரியர் கழக நன்கொடை என்ற பெயரில் தனியாக மற்றொரு கட்டணமும் வசூலிக்கப்பட்டு அதற்கு ரசீது தரப்படுகிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்ட போது, : 'அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவில் பள்ளி வளர்ச்சிக்காக மாணவர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம்' என்றனர்.சில ஆசிரியர்கள் கூறும் போது, 'அரசின் நிதி ஒதுக்கீடு பள்ளிக்கு வந்து சேர்வதில்லை. எனவே பள்ளி பராமரிப்பு பணிக்கு இந்த நிதி தேவைப்படுகிறது' என்றனர்.

'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்': தமிழகத்தில், 800 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பல பள்ளிகள் பல லட்சம் ரூபாய் நன்கொடை வசூலித்து எல்.கே.ஜி., 
அட்மிஷன் கொடுத்தன. பல பெற்றோர் கட்டணம் செலுத்த முடியாமல், கட்டணம் குறைந்த மெட்ரிக் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் பிள்ளைகளை மாற்றினர். 

கட்டணம் செலுத்த முடியாதவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியேற்றிய சம்பவமும் நடந்தது. தற்போது எல்லாம் முடிந்த பின், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல், பெயரளவில் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வணிக நிறுவனங்கள் போல், லாப நோக்கில் செயல்படாமல் சமூக நோக்கில் செயல்பட வேண்டும். கட்டண கமிட்டி நிர்ணயித்த 

கட்டணத்தை விட அதிக கட்டணமோ, நன்கொடையோ வசூலித்தால் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png