!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 12 ஜூன், 2016

பி.எட்., தேர்வு மாற்றப்பட்டது ஏன்?
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு இந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது.


முதலாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, பல்கலை வெளியிட்டது. அதில், ஜூன், 18ம் தேதி துவங்கும் தேர்வுகள், ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த போவதாக அறிவித்துள்ளது.

இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பல்கலை பதிவாளர் கலை செல்வன், தேர்வுஅட்டவணை குறித்த வெளியிட்ட விளக்கம்:

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள், ஆண்டுக்கு, 200 நாட்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு, பி.எட்., படிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததால், கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்க தாமதமானது. ஜூன், 16ம் தேதியுடன், 200 நாட்கள் முடிவதால், அதன்பின், வார இறுதி நாட்களில் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும், வழக்கம் போல் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png