!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 12 ஜூன், 2016

வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி மறுப்பு தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் எதிரே, ஜி ஸ்கூல் என்ற தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி நிர்வாகம், மாணவ, மாணவியர் வீட்டுச் சாப்பாடு எடுத்து வர அனுமதி மறுத்து வருவதோடு, பள்ளி கேன்டீன் சாப்பாட்டை வழங்கியுள்ளது.


இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:

எங்கள் குழந்தைகள் எதை விரும்பிச் சாப்பிடுவர் என்பது எங்களுக்குத் தான் தெரியும். பள்ளி நிர்வாகம் கல்வியை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும்; அதை விட்டு, வீட்டுச் சாப்பாட்டுக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வீட்டில் இருந்து மாணவ, மாணவியர் சாப்பாடு எடுத்துச் சென்றால், பள்ளி ஆசிரியர்கள் மிரட்டி, அதை சாப்பிட விடாமல், கேன்டீன் சாப்பாட்டை சாப்பிட வற்புறுத்துகின்றனர். பள்ளி கேன்டீனுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக, எங்களது குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதை ஏற்க முடியாது. பள்ளி நிர்வாகம், தொடர்ந்து வீட்டுச் சாப்பாட்டுக்கு அனுமதி மறுத்தால், திங்கட்கிழமை மீண்டும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png