!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 9 ஜூன், 2016

எம்.பி.பி.எஸ்., படிப்பு விண்ணப்பங்கள் குறைவு
தமிழகத்தில், அரசு, சுய நிதி கல்லுாரிகள் மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூன், 7ல் முடிவடைந்தது.


அஞ்சல் துறைக்கு வந்த மனுக்கள், நேற்று முன்தினம் இரவு, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்கப்பட்டன. மொத்தம், 26 ஆயிரத்து, 313 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. கடந்த கல்வியாண்டில், 32 ஆயிரத்து, 300 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, 6,000 விண்ணப்பங்கள் குறைந்துள்ளது. இது, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
'விண்ணப்ப வினியோகம், மே, 9ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது. 'நீட்' தேர்வு குழப்பத்தால், மே, 26ல் தான் வினியோகம் துவங்கியது. குறைந்த நாட்களே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன 'நீட்' என்ற அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால், பலர் இன்ஜி., படிப்புகளுக்கு மனதளவில் தயாராகி, விண்ணப்பித்து விட்டனர். இதனால், நுழைவுத் தேர்வு சிக்கல் தீர்ந்தாலும், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லை கடந்த ஆண்டை விட, அனுமதி கிடைத்த தனியார் கல்லுாரிகளின் எண்ணிக்கை குறைந்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் குறைந்துள்ளன இந்த, 'கட் ஆப்' மதிப்பெண் வரை தான், இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விண்ணப்பங்கள் குறைந்திருக்கலாம். இதற்காக, மருத்துவப் படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதாகக் கருத முடியாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png