!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 7 ஜூலை, 2016

ஆசிரியர்களை கண்காணிக்க புது 'சாப்ட்வேர்'
தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது. இந்த விவரங்கள், பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 'சாப்ட்வேர்' மூலம், கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.


இந்த, 'சாப்ட்வேர்' மூலம், அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் பின், எந்த பள்ளியில், எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது; ஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்; அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள், கணினியில் சேகரிக்கப்படுகின்றன.

இந்த பட்டியலின் படி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு, அவரின் பணிகள், வகுப்பு நடத்தும் முறை, கற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால், அவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம் கேட்கவும்; ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், விரிவுரையாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கவும், பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள், 50 சதவீதத்தை தாண்டியுள்ளன. மேலும், தற்போது முதலே ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png