!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 12 ஜூலை, 2016

பள்ளிகள் அருகே தொடரும் வேட்டை : விழுப்புரத்தில் 100 கிலோ 'போதை சாக்லேட்'

தமிழகம் முழுவதும் பள்ளிகள் அருகே, போதைப்பொருள் விற்பனை குறித்த வேட்டை நடந்து வருகிறது. 'தரங், போலா முனாக்கா'வைத் தொடர்ந்து, விழுப்புரத்தில், 'பான் கேன்டி' என்ற, போதை சாக்லேட் சிக்கியதால், கிடங்கிற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.


சென்னை மாநகராட்சி பள்ளி அருகே, பெட்டிக்கடையில் விற்கப்பட்ட, கஞ்சா சாக்லேட் வாங்கி சாப்பிட்ட, பரத், 13, என்ற மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கஞ்சா சாக்லேட் விற்றும் நடவடிக்கை எடுக்க அரசுத்துறைகள் அலட்சியம் குறித்து, 'நமது நாளிதழில்' செய்திகள் வெளியானதும், அரசு சுறுசுறுப்பு அடைந்தது.

அதிரடி சோதனை : தமிழகம் முழுவதும், பள்ளிகள் அருகே போதைப்பொருட்கள், சந்தேகப்படும்படியாக உணவுப்பொருட்கள் விற்னை குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரு வாரமாக இந்த சோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு வாரமாக, 546 பள்ளிகளில் அருகே உள்ள, 1,411 கடைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை, ஆவடியில், ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட் உட்பட, தமிழகம் முழுவதும், 1,100 கிலோ, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14 மாதிரிகள் எடுத்து, போதை அளவு பரிசோதனைக்காக, ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்; வேட்டை தொடரும்' என்றார்.

புதிய போதை சாக்லேட் : சென்னை ஆர்.கே.நகரில், 'தரங்' என்ற பெயரிலும், ஆவடியில், 'போலா முனாக்கா' என்ற பெயரிலான போதை பொருட்கள் சிக்கின. இந்த வரிசையில், விழுப்புரம், பூந்தோட்டம் அருகே, கந்தசாமி லே - அவுட்டில் உள்ள, கிடங்கு ஒன்றில், 100 கிலோ 'பான் கேன்டி' என்ற, போதை சாக்லேட் சிக்கி உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி கூறுகையில், ''இங்கிருந்து மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த வியாபாரி, முகவராக செயல்பட்டுள்ளார். 100 கிலோ போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். கிடங்கிற்கு 'சீல்' வைத்துள்ளோம். மற்ற இடங்களிலும் இந்த சாக்லேட் விற்பனை உள்ளதா என, கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு: செயலர் தகவல் : ''போதை சாக்லேட் குறித்து ஆசிரியர்கள் மூலம் மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை யலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆண்டுதோறும் ஜூலை, 11ல், 'உலக மக்கள்தொகை தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில்
விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, நர்சுகள், கல்லுாரி மாணவ, மாணவியர் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''பள்ளி களுக்கு அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தி, 1,028 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செயயப்பட்டுள்ளன; போதை சாக்லேட்டுகளும் சிக்கி உள்ளன. இதுகுறித்து, ஆசிரியர்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார். இதைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த மக்கள்தொகை தினம் தொடர்பான கருத்தரங்கிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png