!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 28 ஜூலை, 2016

'சரக்கு' அடித்து பள்ளியில் அட்டகாசம் : அடுத்தடுத்து சிக்கிய 17 மாணவர்கள்
வேலுார் மாவட்டத்தில், இரண்டு பள்ளிகளில், 17 மாணவர்கள் மது குடித்துவிட்டு, வகுப்பறைக்கு வந்து அட்டகாசம் செய்த சம்பவங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கரும்பூர் கிராமத்தில் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல், பள்ளி துவங்கிய நிலையில், ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஐந்து மாணவர்கள், ஏதேதோ உளறிக் கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த ஆசிரியர், விசாரிப்பதற்காக அருகில் சென்றபோது, அவர்கள் மது குடித்திருப்பது தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்து வரவழைத்தது. இதற்கிடையே, அந்த மாணவர்கள் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த உமராபாத் போலீசாரும், பள்ளிக்கு வந்தனர். விசாரணையில், அந்த மாணவர்களில் ஒருவருக்கு, நேற்று பிறந்த நாள் என்பதும், அதற்காக அவர் நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. பள்ளிக்கு வரும் வழியிலேயே மறைவான இடத்தில், மது குடித்துவிட்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை கூறி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

'அலம்பல்' : அரக்கோணம் - ஓச்சேரி சாலையிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த, 22ம் தேதி மதியம், மேல்நிலை வகுப்புக்கு வந்த, 12 மாணவர்கள் மது குடித்து வந்துள்ளனர்.

வகுப்பறையில், அவர்கள் தேவையில்லாமல் சந்தேகங்களை எழுப்பினர். சந்தேகமடைந்த ஆசிரியை விசாரிக்க சென்றபோது, அவர்கள் மது குடித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 12 மாணவர்களையும், வகுப்பறையில் இருந்து வெளியேற்றிய தலைமை ஆசிரியர், பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். ஆனால், 25ம் தேதி, ஆறு மாணவர்கள் மட்டுமே, பெற்றோருடன் வந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், பள்ளியில் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது, 12 மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். சிக்கிய, 12 மாணவர்களில், நால்வர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png