!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 22 ஜூலை, 2016

அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதில் சிக்கல் நிதி ஒதுக்கியும் இடமின்றி தவிக்கும் 'வினோதம்'

மதுரையில் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இடவசதி இல்லாததால் கட்டுமான பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி) திட்டம் சார்பில் ஆண்டுதோறும் நடுநிலையில் இருந்து உயர்நிலையாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 2011-12ல் கருவனுார், ஆண்டார்கொட்டாரம், சிவரக்கோட்டை, வடுகப்பட்டி உட்பட 16 பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்ட இந்தாண்டு தலா ரூ.1.06 கோடி ஒதுக்கப்பட்டது. 14 பள்ளிகளில் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை துவங்கி விட்டது.
சிவரக்கோட்டையில் தேர்வான இடத்திற்கு வருவாய்த் துறை அனுமதி கிடைக்கவில்லை. வடுகப்பட்டியில் தேர்வான இடம் நீர்ப்பிடிப்பு என்பதால் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்ட புறம்போக்கு இடத்திற்கும்
அனுமதி கிடைக்கவில்லை.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய அதிகாரிகள் பள்ளிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தாததால் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமான பணி தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆக.,1ல்  ருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டை பொதுப்பணித்துறை வெளியிடும். வரும் ஆக.,1க்குள் இப்பள்ளிகளுக்கும் அனுமதி கிடைக்காவிட்டால் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பில் தான் பொதுப்பணித்துறை பணிகளை துவக்கும். அப்போது ஏற்கனவே ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் நிதி தேவைப்படும். அப்போதும் சிக்கல் நீடிக்கும், என்றார். இடவசதி உள்ள பள்ளிகளை தரம் உயர்த்த பரிந்துரைக்காத முந்தைய கல்வி
அதிகாரிகளின் அஜாக்கிரதையான முடிவால் தற்போது பாதிக்கப்படுவது மாணவர்கள் என்பது வேதனையான விஷயம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png