!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 21 ஜூன், 2015

காலை 6:00 மணிக்கு வகுப்பு :10ம் வகுப்பு மாணவர் தற்கொலை
ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே, தனியார் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு பள்ளிக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ததால், 10ம் வகுப்பு மாணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள, ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் ரஞ்சித் குமார், 15. இவர், கெலமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.தினமும் காலை, 6:00 மணிக்கு பள்ளிக்கு செல்லும் ரஞ்சித் குமார், இரவு, 8:00 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார்.


'டார்ச்சர்' தான் காரணம்'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்பதற்காக, ரஞ்சித்குமாரை, காலையிலேயே பள்ளிக்கு வரச்சொல்லி, ஆசிரியர்கள் தொந்தரவு செய்ததாக, மாணவர் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், நேற்று முன்தினம், வீட்டு பாடம் எழுதாமல் சென்றதால், ஆசிரியர் ஒருவர், ரஞ்சித்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை, வழக்கம் போல், வாகனத்தில் மாணவரை அழைத்து வந்த உறவினர் ஒருவர், பள்ளி அருகே விட்டுச் சென்றுள்ளார். அதன்பின், ரஞ்சித்குமார் பள்ளிக்கு செல்லாமல், அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றார்.

தற்கொலை:காடு உத்தனப்பள்ளி -- போடிச்சிப்பள்ளி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தர்மபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து, ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஓசூர் மற்றும் தர்மபுரி ரயில்வே போலீசார், ரஞ்சித்குமாரின் சடலத்தை கைப்பற்றினர். பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவு காரணமாக, மாணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தர்மபுரி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து,
விசாரித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள் புகலிடம் பாக்., அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானில் உள்ள வஜ்ரிஸ்தான், பலுசிஸ்தான் ஆகிய பகுதிகள் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. அல் - குவைதா, ஆப்கன் தலிபான், தெஹ்ரிக் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் அங்கு முகாம் அமைத்து செயல்படுகின்றன.
இந்த அமைப்புகளை ஒடுக்க, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png