!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 21 ஜூன், 2015

காலியாக உள்ளது தலைமை தகவல் ஆணையர் பதவி:லட்சக்கணக்கில் மனுக்கள் தேக்கம்

அரசு துறைகளில், வெளிப்படையான நிர்வாகம் நடைபெறவும், முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், பொதுமக்கள் விரும்பும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, யார் வேண்டுமானா லும், அரசு துறையில், எந்தத் தகவலையும் கேட்டு பெறலாம். பொதுமக்கள் கேட்கும் தகவலை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்காவிட்டால், மேல் அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம்.அந்த மேல் அதிகாரி கள், 45 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். இல்லையெனில், மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்யலாம். பதில் தராத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.


மாநில தகவல் ஆணையத்திற்கு, 10 ஆணையர்களை நியமிக்க முடியும். ஆனால், தற்போது, நான்கு தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். தலைமை தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீபதி, ஏப்ரல், 26ம் தேதி, ஓய்வு பெற்றுவிட்டார்.அதன் பின், இன்று வரை தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்படவில்லை. அதனால், 'அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர்' என, லட்சக்கணக்கான புகார் மனுக்கள், தகவல் ஆணையத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

பொது தகவல் அலுவலர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள், தகவல் அளிக்க வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆணையம் குறிப்பிட்ட நாட்களுக்குள், மனுக்களை விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. இந்தப் பிரச்னையால், மேல் முறையீட்டு மனு, விசாரணைக்கு வரவே, ஆண்டு கணக்கில் ஆகிறது.இதனால், அதிகாரிகளும் தகவல் தர மறுத்து வருகின்றனர். இது, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் எம்.எஸ்.குமார் கூறியதாவது:தகவல் ஆணையத்திடம் முறையிட்டால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, ஓராண்டுக்கு மேலாகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும். தலைமை தகவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்களை நியமித்து, மனுக்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png