!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 21 ஜூன், 2015

அரசு பள்ளிகளில் கணினி பாடத்துக்குமுக்கியத்துவம்: வாசன் வேண்டுகோள்

சென்னை:'தமிழக அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திற்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கணினித் துறையில், மிக முக்கியமான பதவிகளில், தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை உலக அரங்கில் பெற்றிருக்கின்றனர்.மாணவர்கள் கணினி அறிவியல் படிப்பில் கொண்ட ஆர்வத்தால், தனியார் பள்ளிகளுக்கு சென்று கற்றுக் கொள்கின்றனர். அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கற்பதற்கும், கணினியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக, அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதற்காக, தமிழக அரசுப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, கணினி ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் பி.எட்., கணினி அறிவியல் படித்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பணிக்காக காத்துக்கிடக்கின்றனர். இவர்களின் எதிர் காலத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png