!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 ஜூன், 2015

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.


ஒப்பந்தம்:இதனால், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், அதிகரித்து வந்த கம்ப்யூட்டர் பாடப்பிரிவு, தற்போது அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வந்துவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, சிறப்பு தேர்வுமூலம் நிரந்தரமாக்கிய நிலை யில், கடந்த ஆண்டு, பி.எஸ்சி.,- -பி.எட்., படித்த ஆசிரியர்களை, சீனியாரிட்டி அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியராக தமிழக அரசு நியமித்தது.

மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, வாரத்துக்கு, 28 பாட வேளைகள், இவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இத்துடன் அலுவலக பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், கல்வித்துறை அலுவலகத்திலிருந்து, கடிதம் அனுப்புவது, பதில் பெறுவது, தகவல்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, பொதுத் தேர்வுக்கான பட்டியல் தயாரிப்பது, மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை பெற்றுத்தருவது, நலத்திட்ட உதவிகள் குறித்த கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும், அலுவலக உதவியாளர்கள் பார்த்து வந்தனர்.ஆனால், சமீப காலமாக இந்த பணிகள் அனைத்தும், ஆன்லைன் மயமாகிவிட்டது.

இந்த பணிகளில் தவறுகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கொண்டே செய்யப்படுகிறது.இதற்கு, உயர் அலுவலர்களும் நிர்பந்தம் செய்வதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கூடுதல் பணிஇதுகுறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில், பெரும்பாலான பள்ளிகளில், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது.
இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஆன்லைன் பணிகளை, பாட வேளைகளையும் பார்த்துவிட்டு, கூடுதலாக செய்து வந்தனர். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுவிட்டது. ஆனாலும், அலுவலக பணிகளை, கம்ப்யூட்டர் ஆசிரியர்களிடமே ஒப்படைத்து வருகின்றனர். மற்ற ஆசிரியர்களை போன்றே, அதே அளவுக்கு வகுப்புகளும் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள நேரத்திலும், பள்ளி முடிந்த பின்பும், அலுவலக பணிகளை பார்க்க வேண்டியுள்ளது.மற்ற ஆசிரியர்கள் பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்பும் நிலையில், நாங்கள் வீடு திரும்ப, இரவாகிவிடுகிறது.

மிரட்டல்:இப்பணிகளில் ஏதேனும் குறை வந்துவிட்டாலும், அதற்கும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.கல்வித்துறை அலுவலகத்தில் குறைகளை தெரிவித்தாலும், 'நீங்கள் தான் செய்ய வேண்டும், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்துக்கு ஏராளமான ஆட்கள் உள்ளனர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி மட்டுமல்ல, கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட ஆசிரியர் பணிக்கும், மாதம், 5,000 சம்பளத்தில் கூட, ஏராளமான ஆட்கள் கிடைக்கும் நிலையில், அவர்களுக்கு இதுபோன்ற மிரட்டல் விடுக்க முடியுமா? அலுவலக உதவியாளர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களே செய்யும் நிலை, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலர் மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png