கல்வி ஆய்வு கூட்டத்தில் 'ஐ லவ் யூ': 'வாட்ஸ் - ஆப்'பில் பரவும் ஆடியோ
மதுரை மாவட்டத்தில் தலைமையாசிரியர் கூட்டத்தில் தலைமையாசிரியை ஒருவரிடம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி 'ஐ லவ் யூ... ஐ லைக் யூ...' என்று கூறும் 'ஆடியோ வாட்ஸ் - ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி (பொறுப்பு) பார்த்தசாரதி தலைமையில் கடந்த 13ம் தேதி தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பார்த்தசாரதி சம்பந்தம் இல்லாமல் பேசியது தலைமை ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இது தொடர்பாக கூட்டத்தில் அவர் பேசியது 'வாட்ஸ் - ஆப்'பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.'வாட்ஸ் - ஆப்'பில் வெளியான ஆடியோ வருமாறு:(ஒரு தலைமையாசிரியை பார்த்து) 'நான் வந்து உட்காந்ததிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் ஐ லவ் யூ... ஐ லைக் யூ... ஏனா எப்போதும் சிரிச்ச முகமா இருங்கீங்க...'.
'சிறு வயது முதலே என் கேரக்டர் சரியில்லை; என் அண்ணன் என்னை வழக்கறிஞர் ஆக்க வேண்டும் என நினைத்தார். ஒரு வேளை வழக்கறிஞர் ஆகியிருந்தால் பெஸ்ட் கட்டப்பஞ்சாயத்து
வக்கீலாக மாறியிருப்பேன்...'.
'ஊருக்கெல்லாம் தேச தந்தை மகாத்மா தன் பிள்ளைகளை வளர்ப்பதில் பெரிய ஓட்டை...'
இவ்வாறு அவர் பேசியதை பொறுமையுடன் கேட்டு தலைமை ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர்.
பார்த்தசாரதி கூறுகையில் ''நான் பொறுப்பு அதிகாரியாகத்தான் செயல்பட்டு வருகிறேன். இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன். 'ஐ லவ் யூ' என்பது தவறான வார்த்தையாக நான் கருதவில்லை; தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை நான் கூறியது தவறு என்று கூறினால் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். தவறான நோக்கத்தில் சொல்லியிருந்தால் 100 பேர் அமர்ந்திருக்கும் இடத்தில் சொல்லியிருப்பேனா. காழ்ப்புணர்ச்சி யால் கதை திரித்துள்ளனர்'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.