!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 3 ஜூலை, 2015

பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு
 கோவிலுார் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுார் சங்கந்திடலை சேர்ந்த பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

காரைக்குடி அருகே கோவிலுாரில் டி.சி.பி.எல்., என்ற தனியார் கெமிக்கல் ஆலை இயங்கி வருகிறது. பிப்.,12ல் வாயு கசிவை தொடர்ந்து, ஆலை இயங்க அரசு தடை விதித்தது. ஆலையை மூடக்கோரி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மூன்று மாதம் ஆலை இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இந்த அனுமதி கடந்த ஜூன் 30ல் முடிந்தது. சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியம், மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ஆலை இயங்க அனுமதி அளித்தது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஆலை இயக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 'ஆலையை இயக்க கூடாது' என கோவிலுார் மக்கள் ஊராட்சி தலைவர் அழகப்பன் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். போலீசார் அனைவரையும் வெளியேற்றினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாலையில் ஊர்க்கூட்டம் நடந்தது. ஊராட்சி அலுவலகத்துக்குள் மக்களை அனுமதிக்காமல் கெடுபிடி காட்டிய போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் சலுகைகளை புறக்கணிப்பது, ஆலைக்கு எதிராக வழக்கு தொடுப்பது என முடிவெடுத்தனர். நேற்று, கோவிலுார் சங்கந்திடலை சேர்ந்தவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
தொடக்க பள்ளியில் 124 மாணவர்களுக்கு 52 பேர் மட்டுமே வந்திருந்தனர். உயர்நிலை பள்ளியில் 309 பேரில் 178 பேர் மட்டுமே வந்தனர். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் கூறுகையில், ''60 சதவீத மாணவர்கள் கோவிலுார் உயர்நிலை பள்ளிக்கு வந்தனர்.
இன்று வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றா

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png