!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கைவிரல் இல்லாத மாணவருக்கு கால் ஊனத்திற்கான சான்று
கமுதி அருகே கை பெருவிரல்கள் இல்லாத 10 ம் வகுப்பு மாணவருக்கு கால் ஊனம் என, டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர். இதனால் அம்மாணவர் தேர்வுக்கான சலுகை பெற முடியாமல் தவிக்கிறார்.கமுதி அருகே செய்யாமங்களத்தை சேர்ந்த முனியசாமி மகன் சடகோபன்ரமேஷ்,15. பிறவியிலேயே இவரது 2 கைகளிலும் பெருவிரல்கள் இல்லை. 2008 ல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளார். அதில் கை ஊனத்திற்கு பதிலாக 'கால் ஊனம்' என, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.சடகோபன்ரமேஷ் செய்யாமங்களம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். கை பெருவிரல்கள் இல்லாததால் அவரால் வேகமாக எழுத முடியாது.
இதனால் அரசு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் கேட்டு விண்ணப்பித்தார். அடையாள அட்டையில் கால் ஊனம் என, இருந்ததால் விண்ணப்பத்தை கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்தனர்.இதையடுத்து அவர் அடையாள அட்டையில் கை ஊனம் என, மாற்றி தர ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்களை அணுகியுள்ளார். அங்கு சான்று தராமல் 2 முறை அலைக்கழித்துள்ளனர். அவர் நேற்று தனது தாத்தா சக்திவேலுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.மாணவர் சடகோபன்ரமேஷ் கூறுகையில், “ அடையாள அட்டை வாங்கும்போது கவனிக்கவில்லை. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தான் டாக்டர் தவறுதலாக சான்று அளித்தது தெரியவந்தது,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png