!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 டிசம்பர், 2015

கருவூலகத்தில் "இன்டர்நெட்' சேவை... முடக்கம் :ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்
முதுகுளத்தூர் கருவூலக அலுவல கத்தில் 15 நாள்களாக "இன்டர்நெட்' சேவை முடங்கியுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு டிச. மாதத்திற்குரிய சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருவாய், கல்வி, ஊரக வளர்ச்சி, சத்துணவு, அங்கன்வாடி, புள்ளியியல், வணிகவரித்துறை உட்பட 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதுகுளத்தூர் கருவூலக அலுவலகத்தால் மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா செய்யபட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கபடுகிறது.


அரசு பணியாளர்களுக்கு "சரண்டர்', பிடிமான தொகை (பி.எப்.,), கடன் உட்பட அனைத்து பண பலன்களும் கருவூலக அலுவலகத்தால் வழங்க படுகிறது. டிச., முதல் தேதியிலிருந்து முதுகுளத்தூர் அரசு கருவூலக அலுவலகத்தில் "இன்டர்நெட்' சேவை முடங்கியுள்ளதால், தாலுகா அலுவலக இணைப்பில் தற்காலிகமாக அரசு ஊழியர்களுக்கு பணபலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. "இன்டர்நெட்' இணைப்பு முடங்கியுள்ளதால் டிச., க்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர்கள் சிலர் கூறுகையில்,""15 நாள்களாக முதுகுளத்தூர் கருவூலக அலுவலகத்தில் "இன்டர்நெட்' சேவை முடங்கி யுள்ளதால் ஆசிரியர்கள் உட்பட அரசு அதிகாரிகளுக்கு பணப்பலன் பெற வாரக்கணக்கில் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. சேமிப்பு தொகை கூட பெறமுடியாததால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளோம்', என்றனர்.
இதுகுறித்து கருவூலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "" இன்டர்நெட்' சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையீடு செய்ய பட்டுள்ளது'', என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png