!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 டிசம்பர், 2015

அரையாண்டு தேர்வு தள்ளிப்போவதால்...சிக்கல்! படிப்பதற்கான அவகாசம் குறைய வாய்ப்பு

பொதுத்தேர்வை எதிர்கொள்ள, மாவட்ட கல்வித்துறை தயாராகி வருகிறது; அரையாண்டு தேர்வு தள்ளிப்போயுள்ளதால், படிப்பதற்கான அவகாசம் குறையும் என்பதால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
வரும் மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. மே மாதம், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், முன்கூட்டியே பொதுத்தேர்வு வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தமிழகத்தில், 2,400 மையங்களில், பிளஸ் 2 தேர்வு; 3,500 மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்க உள்ளது. பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் மாணவ, மாணவியரும்; பத்தாம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் மாணவ, மாணவியரும் எழுத உள்ளதாக, தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் டிச., மாதம் அரை யாண்டு தேர்வு, ஜன., மாதம் திருப்பு தேர்வு நடத்தப்படும். பிப்., மாதத்தில், செய்முறை நடைபெறும். இம்முறை, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக, அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு, ஜன., மாதம் நடத்தப்படுகிறது. அதன்பின் திருப்பு தேர்வு, செய்முறை தேர்வு நடத்தப்படும். இவை இரண்டையும் நடத்தி முடிக்க, பிப்., மாதத்தில் போதிய அவகாசம் இருக்குமா என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். குறுகிய கால அவகாசத்தில், மாணவர்களுக்கு நெருக்கடி தருவதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை பாதிக்கலாம் என்ற கவலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற மாவட்டங்களில், பொதுத்தேர்வை சந்திக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வை சந்திக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவி யரின் முழு விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பாடங்களும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். எனினும், அரையாண்டு தேர்வு முடிந்த ஒரு மாத இடைவெளியில் செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்வை சந்திப்பது, மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரையாண்டு தேர்வுக்கு பின் விடுமுறை விடப்படுமா என்ற குழப்பம் உள்ளது. விடுமுறை அளித்தால், திருப்பு தேர்வு, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க, குறுகிய நாட்களே உள்ளன. படிப்பதற்கு மாணவர்களுக்கு அவகாசம் கிடைக்காமல் போகும்' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png