!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் 26-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்; ஜாக்டோ அமைப்பு அறிவிப்பு

25-ந் தேதி கோட்டையை நோக்கி ஊர்வலமும், மறியல் போராட்டமும் நடைபெறும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் 26-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம் 

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.கூட்ட முடிவில் ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்ட போராட்டம் நடத்தினோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. 9-ந் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனவே இடைக்கால பட்ஜெட்டில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு வரும் என்று காத்திருந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் வரவில்லை. எனவே இதுபற்றி ஆலோசிக்க பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களையவேண்டும். பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.25-ந்தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து ஊர்வலமாக கோட்டைக்கு சென்று மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25-ந் தேதி போராட்டம் நடைபெற்ற பிறகும் எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், 26-ந் தேதி முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

தேர்தலை புறக்கணிப்போம்

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் வருடம் முழுவதும் ஈடுபடுகிறார்கள். தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்களை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அனுப்பினால் தேர்தலை புறக்கணிப்போம்.இவ்வாறு என்.ரெங்கராஜன் கூறினார்.

கூட்டத்தில் இளங்கோவன், மீனாட்சிசுந்தரம், தியாகராஜன், தாஸ், மணிவாசகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png