!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

படுக்கையில் மொபைல் பயன்பாடு : மோசமான பின் விளைவுகள்..!

தினமும் உறங்குவதற்கு முன்பு நமது ஸ்மார்ட் போனினை பயன்படுத்துவது ஒரு அன்றாட பழக்கம் போல் ஆகிவிட்டது. அது நம் கண்களுக்கும், உடல் நாலத்திற்கும் மிகவும் கேடு என்று தெரிந்தும்கூட நாம் அதை ஒரு பெரிய விடாயமாக எடுத்துக் கொள்ளுவதில்லை என்பது தான் உண்மை. 

பாதிப்பு : தூங்குவதற்கு முன்பு எலெகட்ரானீக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது, அது நமது தூக்கத்தை பாதிக்கும் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அவைகள் நம் உள்ளூர ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


சங்கிலி எதிர்வினை : படுக்கையில் மொபைல் கருவிகளை பயன்படுத்தும் பழக்கமானது ஒரு விபரீதமான சங்கிலி எதிர்வினையை (dangerous chain reaction) உருவாக்குகிறது என்கிறார் டாக்டர். டேனியல் சிகெல்.


ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம் : அதாவது, ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்கம் செய்யும்.
மெலடோனின் சுரப்பு : அந்த ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்கள், நமது மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பபை தடுக்குமாம். மெலடோனின் சுரப்பு என்பது நமது உடலை சோர்வாக இருக்கும்படியாக உணரச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
உறக்க-விழிப்பு சுழற்சி : மெலடோனின் - மனிதர்களின் உறக்க-விழிப்பு சுழற்சியைக் (sleep wake cycle) கட்டுப்படுத்தும் இயக்குநீர் என்றும் கூறலாம்
அசதி : இதுபோன்ற மெலடோனின் சுரப்பு தடுக்கப்படும் போது நாம் சோர்வாகவோ, அசதியாகவோ உணர மாட்டோம். தொடர்ந்து மொபைல் கருவிகளை பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
அவசியம் : எந்தவொரு மருந்தும், போதை பொருளும் பயன்படுத்தாமல், 7 முதல் 8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம் என்றும், அது உடல் மற்றும் மன ரீதியான நன்மைக்கு மிகவும் அவசியம் என்றும் அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Show ஆல்சைமர், ப்ரிமெச்யூர் டிமென்டியா : நல்ல உறக்கம் தான் ப்ரிமெச்யூர் டிமென்டியா (premature dementia) என்ற மனநிலை சார்ந்த பாதிப்பு, ஆல்சைமர் (Alzheimer) எனப்படும் அறிவாற்றல் இழப்பு போன்ற பொதுவான பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்பதும், 

நச்சு இரசாயனம் : மூளையின் நச்சு இரசாயனங்களை சுத்தம் செய்ய உடலுக்கு 7 முதல் 8 மணி நேர உறக்கம் என்பது மிகவும் கட்டாயம் ஆகும். அப்போது தான் அடுத்தடுத்த நாளுக்கான வேலையை மூளை செய்யும் என்கிறார்கள் 
ஒரு மணி நேரம் : உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே எலெகட்ரானீக் கருவிகள் சார்ந்த வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு செல்வது உறக்கத்திற்கு மிகவும் நல்லது என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png