!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 11 பிப்ரவரி, 2016

அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள்... முடங்கின! காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது
அனைத்து துறை அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழுவினர், 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று துவங்கினர். மாவட்ட அளவில், 5,920 பேர் பங்கேற்றுள்ளதால், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் உட்பட, அனைத்து அரசு துறைகளிலும், பணிகள் முடங்கின.


"புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசு ஊழியருக்கு இணையான "அலவன்ஸ்' வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கங்கள் என, 56 சங்கங்கள் இணைந்த குழுக்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கியது. கலெக்டர் அலுவலக வளாகம், ஒன்றிய அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிகள் பாதிக்கப்பட்டன. அமைச்சர்களின் பேச்சை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம், ஊராட்சி செயலாளர் ஒன்றியம், அரசு பணியாளர் சங்கங்கள், போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டன. இதனால், ஒவ்வொரு அலுவலகத்திலும், சிலர் மட்டும் பணியில் இருந்தனர். மாவட்ட அளவில், 5,920 பேர், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பூட்டு உடைப்பு
ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. ஒன்றிய அலுவலகங்களில், சிலர் பணியில் இருந்தாலும், பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றதால், வழக்கமான பணி நடக்கவில்லை. ஊராட்சி செயலர்கள் விடுப்பில் சென்றதால், ஊராட்சி அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்கள், மையங்களை பூட்டிச்சென்றனர். முதல் நாளான நேற்று, ஒட்டுமொத்த அரசு பணிகளும் ஸ்தம்பித்தன.

சத்துணவு பணியாளர்களும், மையங்களை பூட்டிச் சென்றனர். மாணவ, மாணவியருக்கு சத்துணவு தடைபடக்கூடாது என்பதற்காக, தாசில்தார் முன்னிலையில், மையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு, மாற்று பணியாளர் மூலம், சத்துணவு சமைத்து வழங்கப்பட்டது. ஒன்றிய நிர்வாகம் மூலமாக, அனைத்து மையங்களுக்கும், புதிய பூட்டு வாங்கிக் கொடுக்கப்பட்டது.

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது; ஊரக வளர்ச்சித்துறை வட்டக்கிளை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயன், செயலாளர் முருகதாஸ், நில அளவையாளர் இளங்கோ, அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அம்சராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், காரில் அழைத்து வரப்பட்டார். கோரிக்கை அடங்கிய அட்டையை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளிடம், அவர் வழங்கினார்.
அவிநாசி: அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள்,

அங்கன்வாடி பணியாளர்கள், சாலை பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என, 400க்கும் மேற்பட்டோர், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா
அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சான்றிதழ் வாங்க

அலுவலகம் வந்தவர்கள், ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். அவிநாசி தாலுகா அலுலவக நுழைவாயில் முன், அரசு ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முத்துசாமி, ஆதரவு தெரிவித்து பேசினர்.
பல்லடம்: பல்லடம் தாலுகா அலுவலகம் முன், அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சுந்தராம்பாள் தலைமையில், 350 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில், ஆயிரக்கணக்கான அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்தும், மக்களுக்கான சேவை முடக்கம், சத்துணவு, அங்கன்வாடி பணிகள் குறித்தும், பணியில் இருந்த அதிகாரிகள் கண்காணித்தபடி இருந்தனர்.

512 அங்கன்வாடி மூடல்
கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், நேற்று துவங்கிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டம் குறித்து, பெற்றோருக்கு முன்கூட்டியே ஊழியர்கள் தெரிவித்தால், பலரும் குழந்தைகளை அனுப்பவில்லை. இதனால், தேவையற்ற அலைச்சல், குழப்பம் தவிர்க்கப்பட்டது. அங்கன்வாடி மையங்கள் முன், வேலைநிறுத்தம் குறித்து, அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. திருப்பூர், காங்கயம், பல்லடம், அவிநாசி, உடுமலை பகுதியை சேர்ந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள், 150க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள, 512 அங்கன்வாடிகள் மூடப்பட்டு, 1,512 பேர் பணிகளை புறக்கணித்ததாக, மாநில செயலாளர் பாக்கியம் கூறினார்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png