!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

பிளஸ்–2 தேர்வு முடிவு அடுத்த மாதம் 7–ந் தேதிக்கு முன்பாக வெளியிட ஏற்பாடு அரசு தேர்வுகள் துறை மும்முரம்

பிளஸ்–2 தேர்வு முடிவை அடுத்த மாதம் 7–ந் தேதிக்கு முன்பாக வெளியிட அரசு தேர்வுகள் துறை அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
பிளஸ்–2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 4–ந் தேதி முதல் ஏப்ரல் 1–ந் தேதி வரை பிளஸ்–2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு வருகிற 13–ந் தேதி முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 14–ந் தேதி பிளஸ்–2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 68 மையங்களில் நடந்து வருகிறது.
கணிததேர்வில் 6 கருணை மதிப்பெண்
தமிழ் தேர்வு விடைத்தாள்கள், ஆங்கிலம் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன.
வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17–வது வினா சரியாக கேட்கப்படவில்லை. மேலும் 5 மதிப்பெண் கேள்வியில் 70–ம் நம்பர் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 + 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 கருணை மதிப்பெண் வழங்கலாம் என்று ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது.
அதுபோல கணித விடைத்தாள் திருத்தும்போது கருணை மதிப்பெண் 6 போடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கணிததேர்வில் ஆங்கில வழியில் கேட்கப்பட்ட வினாத்தாளில் சரியாக உள்ளது. ஆனால் தமிழ் வழியில் 43–வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 6 மதிப்பெண் உண்டு.
விடைத்தாள் திருத்தும் பணி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
தேர்வு முடிவு மே 7–ந் தேதிக்கு முன்பாக.....
பிளஸ்–2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் 2 வாரம் நீடிக்கும். கடந்த வருடம் மே மாதம் 7–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே மாதம் 21–ந் தேதி வெளியிடப்பட்டது.
இந்த வருடம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதால் மே மாதம் 7–ந் தேதிக்கு முன்பாக பிளஸ்–2 தேர்வு முடிவை வெளியிட மும்முரமாக அரசு தேர்வுகள் இயக்குனரக அதிகாரிகள் உள்ளனர்.  இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png